அன்புக்குரிய நமது சமுக மாணவ மாணவியர்களே , இந்த பக்கம் முழுவதும் உங்களுக்கான கல்விச்செய்தி . மேலும் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் போன்ற தகவல் மற்றும் அதற்குரிய விண்ணப்பம் பெருவதற்காண செய்தித்தாள் (News Papers) விளம்பரங்கள்ஆகியவற்றையும் இதில் இணைத்துளோம் .இப்பக்கத்தில் நிங்களும் உங்களுக்கு தெரிந்த விவரங்களை இதில் இணைக்கலாம் . உதவித் தொகை வழங்க புதிய ஏற்பாடு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை வழங்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, மாவட்ட வாரியாக உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். இவை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த முறையால் பல இடங்களில் கல்வி உதவித் தொகை காலதாமதம் ஆகிறது என மாணவர்கள் முறையிட்டனர். இதனால், அரசு சார்பில் என் ஐ சி மூலம் புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உதவித் தொகை வழங்கும் திட்டம் கல்லூரிகளில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனி மென்பொருள் இம்மாத இறுதிக்குள் உருவாக்கப்பட்டு விடும். ஆவணங்களை முறையாக இருந்தால் பள்ளிகளுக்கே காசோலையாக முழுத் தொகையும் அனுப்பி விடுவோம். இந்த திட்டம் முதல் முறையாக கோவை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மட்டும் இந்த முறை செயல்படுத்தப்படுகிறது என்று கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அருமைதாஸ் கூறினார். பிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை-இந்தியாவில் உள்ள சிறுபான்மை மாணவிகள் பொருளாதார வசதியின்மையால் தங்களது படிப்பை தொடரமுடியாமல் பாதியிலேயே கைவிடும் நிலைக்கு ஆளாகின்றனர். இதனையடுத்து இவர்கள் தொடர்ந்து படிப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் மவுலான ஆசாத் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம். இது மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் கீழ் 1989ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை மாணவிகள்: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா ஆசாத் பெயரில் துவக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி, நாட்டில் உள்ள முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், புத்தம் போன்ற சிறுபான்மை சமூகத்தில் உள்ள மாணவிகள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும். கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மட்டும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேறு எதாவது ஒரு கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது. உதவித்தொகை: இத்திட்டத்தின் படி விண்ணப்பிக்கும் தகுதியுள்ள மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்தொகை பிளஸ் 1 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2 படிக்கும் போது 6 ஆயிரம் ரூபாயும் என இருதவணையாக வழங்கப்படும். இத்தொகை மாணவிகளின் பள்ளிக் கட்டணம், புத்தகம், எழுதுபொருள், விடுதிக்கட்டணம் போன்றவற்றுக்காக வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் தகுதிப் பரிசுகள்- பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களில் 15 மாணவிகளில் முதல் 1000 பேருக்கும் அவர்களது மேற்படிப்பை தொடர்ந்து படித்தால் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.1500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதிப்பரிசு வழங்கப்படுகிறது. மாநில அளவில் முதன்மை மதிப்பெண் பெறும் சிறந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை- 1 | பன்னிரெண்டாம் வகுப்பு | பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலாவதாக வரும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.25,000 வீதம். | 2 | பத்தாம் வகுப்பு | பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலாவதாக வரும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.10,000 வீதம். | 3 | பன்னிரெண்டாம் வகுப்புத்தேர்வு மாநில அளவில் (25 பாடங்கள்) | பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் ஒவ்வொரு பாடத்திலும் (25 பாடங்கள்) முதல் மதிப்பெண் பெற்ற 14 ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் அல்லது ஒரு மாணவிக்கு பரிசு ரூ.2,000 வீதம். | 4 | பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் (ஐந்து பாடங்கள்) | பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் ஒவ்வொரு பாடத்திலும் (5 பாடங்கள்) முதல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் அல்லது ஒரு மாணவிக்கு பரிசு ரூ.1,000 வீதம். |
அண்ணல் காந்தி நினைவுப் பரிசுத்தொகை-பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி, மேற்படிப்பினை தொடர இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அண்ணல் காந்தியடிகளின் நினைவாக இப்பரிசுத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பரிசுத்தொகை முதல் வருடத்திற்கு ரூ.1500 வீதமும், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படுகிறது. சிறந்த மாணவர்களுக்கான ஊக்கத்தொகை-இத்திட்டத்தின் கீடிந ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறுத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் இரண்டு மாணவர்கள் மற்றும் இரண்டு மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு முதல் ஆண்டுக்கு ரூ.800ம், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஓராண்டிற்கு ரூ.960 வீதமும் அவர்கள் படிப்பினை தொடர்ந்தால் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் முதன்மை மதிப்பெண் பெறும் சிறந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை-பன்னிரெண்டாம் வகுப்பு | ஆதிதிராவிடர் /பழங்குடியினர் /கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.3,000 வீதம் | பத்தாம் வகுப்பு ( 3 பரிசுகள்)
| முதல் பரிசு | ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.1,000 வீதம். | இரண்டாம் பரிசு | ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.500 வீதம் | மூன்றாம் பரிசு | ஆதிதிராவிடர் / பழங்குடியினர் /கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.300வீதம் |
பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்-ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்த பெண்கல்வி ஊக்குவிப்பு சிறப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையை 100 விழுக்காடாக உறுதிப்படுத்திடும் நோக்கத்தோடு “பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின பெண் குழந்தைகள் 60,000 பேருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆதிதிராவிட மாணவிகளைப் பொறுத்த வரையில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களான தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. பழங்குடியின மாணவிகளைப் பொறுத்த வரையில் சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 6 ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வி பயிலும் மாணவியர் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் 30,000 ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவியர்க்கு மாதம் ஒன்றுக்கு ரூ.100வீதம் 10 மாதங்களுக்கு சென்னையைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Ranipettai Engineering College, Vellore |
| | Know more about colleges in Tamil-Nadu, INDIA |
http://www.bharathcollege.org/ |