தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம்
இரத்த தானம் மிகவும் அவசியமான ஒன்று
Who Need Blood?
The Patient Need Blood while he is facing a road accident, or adviced by a doctor to surgery in un avoded position. So some blood may loos from the patient body. At the time he or she need blood. |
|
|
Who Donate Blood?- One Who does Not Suffered From any diseases
- Donator does not have drinking of alcohol and does not have the habit of smoking
|
|
|
Why It's Important to Donate Blood?
As basically god's decision we may enter this earth. While Living we face some problem, we also create some problem, we also give some problem to others and ourself. So No one have permitted to take the lives of others. In other name we may save from the problem, is better action. |
|
|
Why With adiworld Donotor!
In Public Service Industry, Lot of people Involves. But we Adiword Group of Services also offer free information of blood donators directory thorugh this Public Service Basis. |
|
இரத்ததானம்
விபத்து மற்றும் அறுவை சிகிச்சைகளின் போது இரத்தம் தேவைப்படுவதால் நாம் தானம் செய்யும் இரத்தம் ஒருவருடைய உயிர் காக்கும் பணிக்கு உதவுகிறது.
இரத்தத்தில் A, B, AB, O மற்றும் அதில் பாஸிட்டிவ் நெகடிவ் ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. இரத்தத்தின் பிரிவுகளை கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர். அவர் பிறந்த ஜூன் 14ம் தேதி தான் இரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது
யார் யார் ரத்ததானம் செய்யலாம்?:
- 18 முதல் 60 வயது வரையுள்ள எல்லா ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.
- நம் ஒவ்வொருவருடையை உடலிலும் சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது.
- இதில் இரத்த தனத்தின்போது எடுக்கப்படும் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் மட்டுமே.
- நாம் தானம் செய்யும் இரத்தம் 350 மில்லி லிட்டர் இரத்தம் 24 மணி நேரத்திற்குள்ளாக நமது உடலில் மீண்டும் உற்பத்தியாகி விடும்.
- இரத்ததானம் செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.
- இரத்ததானம் செய்பவரின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.
- இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
- முன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம்.
- இரத்ததானம் செய்ய இருபது நிமிடங்களே ஆகும்.
- இரத்ததானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம்.
ரத்த தானம் செய்யக் கூடாதவர்கள்:
- சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்துமா-காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிரமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்
- வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பால் வினை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து உட்கொண்டவர்கள் மது அருந்தியவர்கள்
- கடந்த ஒரு வருடத்தில் மஞ்சள் காமலையால் பாதிக்கப்பட்டவர்கள், மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சமீபத்தில் நோய் தடுப்பு ஊசி போட்டவர்கள் கர்பிணிப் பெண்கள் குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் மாதவிடாய் காலத்தில் இருப்பவர்கள்
- எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் கண்டிப்பாக செய்யக்கூடாது.
இரத்த தானம் என்ற வாக்கியத்திலே தானம் என்று இருப்பதால் இரத்தத்தை தானம் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.